Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் – நுவான் போபகே எச்சரிக்கை

November 8, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் – நுவான் போபகே எச்சரிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதாகக் கூறிக்கொண்டு, கடந்தகால மக்கள் போராட்டங்களின்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த முடியாமல் போன நடவடிக்கைகளைச் சட்டபூர்வமாக்கும் வகையிலேயே பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்டமூலம் கொண்டுவரப்படுவதாக மக்கள் போராட்ட முன்னணியின் செயற்குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான நுவான் போபகே விசனம் வெளியிட்டுள்ளார்.

இது ஏற்கனவே நடைமுறையிலிருந்த சட்டத்தைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிகமான அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சட்டமூலங்கள் தொடர்பாக கேசரிக்கு ஞாயிற்றுக்கிழமை (08) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் விபரிக்கையில்,

1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் மேற்கொள்ள முடியாமல் போன பல நடவடிக்கைகளைப் புதிய சட்டமூலத்தின் ஊடாகச் சாத்தியப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.

2022ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தின்போது காலிமுகத்திடலுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதைத் தடுக்கவும், போராட்டச் செயற்பாட்டாளர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், ஜூலை 9ஆம் திகதி பொதுமக்கள் கொழும்புக்கு வருவதைத் தடுக்கவும் அரசாங்கம் முயற்சித்தது.

எனினும், சட்ட ஏற்பாடுகள் இல்லாததால் அவை வெற்றியளிக்கவில்லை. தற்போது ஜனாதிபதி, பொறுப்புவாய்ந்த அமைச்சர் மற்றும் பொலிஸாருக்கு தனிநபர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அமைப்புகளைத் தடை செய்யவும் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

அதேபோன்று, வசந்த முதலிகே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 115, 116ஆம் பிரிவுகளின் கீழ் நீதிமன்றக் கண்காணிப்பைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், புதிய சட்டமூலத்தில் இந்தப் பிரிவுகள் பொருந்தாது என்ற ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் வசந்த முதலிகே ஆகியோர் போதிய சாட்சியங்கள் இன்றி சுமார் ஓராண்டுக்கு அண்மித்த காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தற்போது புதிய சட்டமூலத்தின் ஊடாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை 20 ஆண்டுகள் வரை தாமதப்படுத்துவதற்குச் சட்டமா அதிபருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

மேலும், பயங்கரவாதச் செயலுக்கான விரிவான வரைவிலக்கணம் புதிய சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசாங்கம், வெளிநாட்டு அரசாங்கம் அல்லது சர்வதேச அமைப்பொன்றின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் நோக்கிலான செயற்பாடுகள் பயங்கரவாதமாகக் கருதப்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

வரிச்சுமை, பொருட்களின் விலை, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் பொலிஸ் அடக்குமுறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகளின்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அவற்றையும் பயங்கரவாதச் செயல்களாக வகைப்படுத்தக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

இதனால், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் பொதுமக்களும் தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்களும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படும் ஆபத்து உள்ளதாகவும், ஏற்கனவே நடைமுறையிலிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிடப் பலமடங்கு அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்ட இந்தப் புதிய சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் உறுதியாகக் குரல்கொடுக்க வேண்டும் என்றார்

Previous Post

குற்றச்செயல் சட்டமூலங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையை கேள்விக்குட்படுத்தும்: அஜித் பி. பெரேரா

Next Post

சீன் | திரைப்பட விமர்சனம்

Next Post
சீன் | திரைப்பட விமர்சனம்

சீன் | திரைப்பட விமர்சனம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

சீன் | திரைப்பட விமர்சனம்

சீன் | திரைப்பட விமர்சனம்

November 8, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் – நுவான் போபகே எச்சரிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் – நுவான் போபகே எச்சரிக்கை

November 8, 2026
குற்றச்செயல் சட்டமூலங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையை கேள்விக்குட்படுத்தும்: அஜித் பி. பெரேரா

குற்றச்செயல் சட்டமூலங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையை கேள்விக்குட்படுத்தும்: அஜித் பி. பெரேரா

November 8, 2026
யாழ்ப்பாணத்தில் நடந்த ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீடு

யாழ்ப்பாணத்தில் நடந்த ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீடு

November 8, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures