Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சீன் | திரைப்பட விமர்சனம்

November 8, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
சீன் | திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : ழகரம் ஸ்டுடியோஸ் – 2 D என்டர்டெய்ன்மென்ட்

நடிகர்கள் : சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன், டொவினோ தோமஸ் மற்றும் பலர்.

இயக்கம் : ஜித்து மாதவன்

மதிப்பீடு : 3/5

இந்த ஆண்டில் ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என இரண்டு வணிக ரீதியான பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை அளித்த நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் ஹிட்டை குறி வைத்து படமாளிகையில் வெளியாகி இருக்கும் ‘ திரைப்படம் ‘ சீன்’ –  இது ரசிகர்களின் வரவேற்பை பெற்றதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

ஈஸ்வரன் ( நஸ்லென்) எனும் இளம் வாலிபன் சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டு, சர்வ சாதாரணமாக கூலிக்கு கொலை செய்து வருகிறார். இவனுக்கு ஓட்டோ ஓட்டும் ஆண் சாரதியும்,  சிறிய அளவில் விற்பனை நிலையத்தை நடத்தி வரும் பெண்மணியும் உடந்தையாக இருக்கிறார்கள்.

இவர்கள் மூவரும் இயல்பாக மக்களுடன் கலந்திருப்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் இந்த சட்டவிரோதமான காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் கொலை … சீரியல் கொலையாளி என காவல்துறையினர் சித்தரித்து, அது தொடர்பாக ஒருவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். இந்த நிலையில் காவல்துறை அதிகாரியான இன்பராஜ் ( சூர்யா ) தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் பணியாற்றும் சக காவலர்களிடத்தில் பணியின் காரணமாக அதிருப்தியை சம்பாதிக்கிறார்.

இதனால் அவருக்கு எதிராக அவருடன் பணியாற்றுபவர்களே உயரதிகாரிகளிடம் புகார் அளிக்க திட்டமிடுகிறார்கள். இந்த தருணத்தில் காவல்துறை உயர் அதிகாரியான ஸ்டீபனை சந்தித்து இன்பராஜ் தான் பதவியை ராஜினாமா செய்வதாக சொல்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கிறார். இந்நிலையில் தொடர் கொலையாளி நிகழ்த்திய கொலைக்கும் அண்மையில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கும் இடையே வேறுபாடு இருப்பதாக தொழில்நுட்ப ரீதியில் சந்தேகங்கள் எழுப்பப்படுவதால், தான் உண்மையில் அசலான குற்றவாளியை தான் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோமா…! என்ற சந்தேகம் இன்பராஜிற்கு எழுகிறது

இது காவல்துறையிலும் எதிரொலிக்கிறது. இதனால் இன்பராஜின் ராஜினாமா ஏற்கப்பட்டு, அவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். ஆனால் எதனையும் தீர்க்கமாக ஆலோசித்து குற்றவாளியை துல்லியமாக அவதானிக்கும் இன்பராஜ் – இந்த குற்றவாளி விடயத்தில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என களத்தில் இறங்குகிறார்.

இதனிடையே இன்பராஜ் பார்வை திறன் சவால் உள்ளவர் என்பது ஏனைய கதாபாத்திரங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தெரிய வருகிறது. இதன் பிறகு இன்பராஜ் அசலான குற்றவாளியை வலை விரித்து கண்டுபிடித்து சிறை தண்டனையை வாங்கி தந்தாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தில் பரபர திரைக்கதை.

பார்வை திறன் சவால் உள்ள காவல்துறை அதிகாரியான இன்பராஜ் கதாபாத்திரம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பார்வை திறன் குறைபாடு உள்ளது என்பது வெளிப்படும் இடம்… அது தொடர்பாக அதற்குப் பின்னரான காட்சிகள் -நிகழ்வுகள்- சம்பவங்கள்-  எல்லாவற்றிலும் அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர்.

அதிலும் மாயா மனோகர் ( நஸ்ரியா) கதாபாத்திரத்தின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தாலும்.. அதில் முகத்தில் இளமையை தொலைத்த-  குறும்புத்தனம் ஏதும் இல்லாத-  க்யூட்டான  எக்ஸ்ப்ரஷன்களை அளிக்காத – முத்துன கத்திரிக்கா – நஸ்ரியா நஜீமுக்கு பதிலாக, இளமையும், புகழுடனும் இருக்கும் வேறொரு நட்சத்திர நடிகையை நடிக்க வைத்திருக்கலாம்.

இருப்பினும் நஸ்ரியா எக்சன் காட்சிகளில் அதிரடியாக நடித்திருப்பதை ரசிக்க முடிகிறது.

இன்பராஜின் பெற்றோர் கதாபாத்திர வடிவமைப்பும் தனி கவனம் ஈர்க்கிறது. இதில் ஆனந்த ராஜின் பங்களிப்பும் சிறப்பு.

ஸ்டீபன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூத்த நடிகர் லால்-  முதல் முறையாக இந்த கதாபாத்திரத்திற்கு செயற்கையாக நடித்திருக்கிறார்.

சைக்கோ கொலையாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் டொவினோ தாமஸின் திரை தோற்றம்-  சிறப்பு கதாபாத்திரம்-  இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வித்திடுகிறது. அவரின் நடிப்பும், அவர் ஏற்படுத்தும் தாக்கமும் சிறப்பு.

சிபி கதாபாத்திரத்தில் காவலராக நடித்திருக்கும் நடிகர் ராஜ் பிரியன் – வினோத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகரும் ரசிகர்களின் கவனத்தை கவர்கிறார்கள்.

பார்வைத்திறன் சவால் உள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யாவும் அந்த கதாபாத்திரத்திற்காக உருவாக்கப்பட்ட நிலவியல் சார்ந்த பின்னணியை அவர் உள்வாங்கிக் கொண்டு நடிப்பதிலும்.. தன் வழக்கமான தனித்துவமான முத்திரையை பதிக்கிறார். அதிலும் குறிப்பாக தனது உதவியாளரான மாயாவிடம், ‘நீ எப்படி இருப்பாய்? என்று சொல்’ என கேட்டுவிட்டு, அவர் கற்பனையில் ஜோதிகாவை நினைப்பது ரகளையான ரசனை.

சூர்யாவின் பஞ்ச் டொயலாக்கான ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா..’ என்பதையும் கலாய்த்திருக்கிறார்கள். குற்ற சம்பவம் தொடர்பான காட்சிகளும் அது தொடர்பான விவரணங்களும்.. ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.

சுஷின் சியாமின் பின்னணி இசை, வினித் அகஸ்டியனின் ஒளிப்பதிவு – அஜ்மல் சாபுவின் படத்தொகுப்பு – கலை இயக்கம் – என ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய பங்களிப்பை நிறைவாக அளித்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் வாழ்த்துகிறார்கள்.

சூர்யா- ஆனந்தராஜ்- ராஜ் பிரியன்- ஆகியோரை தவிர மற்றவர்கள் பேசும் தமிழில் மலையாள நெடி அதிகம். உச்சக்கட்ட காட்சியில் மாஸ் ஹீரோவான சூர்யாவும் … தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் மலையாள நடிகர் நஸ்லெனும் மோதிக்கொள்வது … போதிய பரபரப்பையோ.. விறுவிறுப்பையோ… , தாக்கத்தையோ… ஏற்படுத்தவில்லை. இருப்பினும் ரசிகர்கள் சூர்யாவிற்காக-  அவரின் திரை தோற்றத்திற்காக சீனை ரசிக்கிறார்கள்.

சீன்‌( SCENE) – லீன்( LEAN)

Previous Post

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் – நுவான் போபகே எச்சரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

சீன் | திரைப்பட விமர்சனம்

சீன் | திரைப்பட விமர்சனம்

November 8, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் – நுவான் போபகே எச்சரிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் – நுவான் போபகே எச்சரிக்கை

November 8, 2026
குற்றச்செயல் சட்டமூலங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையை கேள்விக்குட்படுத்தும்: அஜித் பி. பெரேரா

குற்றச்செயல் சட்டமூலங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையை கேள்விக்குட்படுத்தும்: அஜித் பி. பெரேரா

November 8, 2026
யாழ்ப்பாணத்தில் நடந்த ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீடு

யாழ்ப்பாணத்தில் நடந்த ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீடு

November 8, 2026

Recent News

சீன் | திரைப்பட விமர்சனம்

சீன் | திரைப்பட விமர்சனம்

November 8, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் – நுவான் போபகே எச்சரிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் – நுவான் போபகே எச்சரிக்கை

November 8, 2026
குற்றச்செயல் சட்டமூலங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையை கேள்விக்குட்படுத்தும்: அஜித் பி. பெரேரா

குற்றச்செயல் சட்டமூலங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையை கேள்விக்குட்படுத்தும்: அஜித் பி. பெரேரா

November 8, 2026
யாழ்ப்பாணத்தில் நடந்த ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீடு

யாழ்ப்பாணத்தில் நடந்த ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீடு

November 8, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures