ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஐக்கிய தேசியக்கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததன் பின்னரே அதுகுறித்த தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக்கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.
இந்தநிலையில் குறித்த கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர்களான மனோ கணேசன், வீ. இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், எம். திலகராஜ், அ. அரவிந்தகுமார் உட்பட அரசியல் உயர்பீடத்தின் அங்கத்தவர்கள் இதில் கலந்துகொண்டனர்.













