Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம்

November 20, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருளை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் | அரசாங்கம்

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் தொடர்பில் நீதியமைச்சருடனும்,தேசிய நல்லிணக்கத்தை பாடசாலை மட்டத்தில் அமுல்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சருடனும் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒரு சில அரசியல் தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்கள் ஏனைய மதத்தை அல்லது இனத்தை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் இது தொடர்ந்தும் இடம்பெருமானால் இந்த நாடு பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து மீளாது எனவும் குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை தொடர்பான  துறைசார் மேற்பார்வை குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தலைமையில் கடந்த வாரம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.

இந்தக் கூட்டத்தில் நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு,சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லினக்கத்துக்கான அலுவலகம் என்பவற்றின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த குழுவின் தலைவர்,கடந்த  ஓரிரு மாதங்களாகப் பார்க்கும் போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மீண்டும் பிரயோக ரீதியாக செயல்படுத்துவதற்கு தேவையான விடயங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளது என்றும் சில அரசியல் தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்கள் ஏனைய மதத்தை அல்லது இனத்தை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் இது தொடர்ந்தும் இடம்பெருமானால் இந்த நாடு பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு அரசு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அளிக்க மாட்டாது எனத் தெரிவித்தார்.

அதனால் இந்த சட்டமூலத்தை மேலும் திருத்தம் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்தக் குழுவின் ஊடாக மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.அத்துடன்,தேசிய ஒற்றுமை மற்றும் நல்லினக்கத்துக்கான அலுவலகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய  இந்த சட்டமூலத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள குறிக்கோளான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய தேசிய கொள்கையை தயாரிப்பதன் அடிப்படை விடயங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் அதனை எதிர்வரும் தினங்களில் வெளியிட முடியும் எனவும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லினக்கத்துக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

தேசிய ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கான சிறந்த தளம் பாடசாலைக் கட்டமைப்பு எனச்சுட்டிக்காட்டிய குழு இந்தச் சட்டத்தில் பாடசாலைக் கட்டமைப்பை சட்டரீதியாக எவ்வாறு இணைத்துக்கொள்ள முடியும் என குழு வினவியது. கல்வி அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவகத்துடன் இணைந்து இலங்கையிலுள்ள 67 மும்மொழிப் பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுடன் இணைந்து ஆரம்பகட்ட வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ளத் தயாராகவுள்ளதாக தேசிய ஒற்றுமை மற்றும்நல்லினக்கத்துக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அத்துடன் இந்த சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்துக்கு தேவையான திருத்தங்களுக்காக அரசாங்கத்துக்கு பரிந்துரை வழங்க முடியும் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அத்துடன் இது தொடர்பில் நீதி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும்,துறைசார் மேற்பார்வைக் குழுவின் அடுத்த கூட்டங்களில் இளைஞர்பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்வதக்கவும் குழுவின் தலைவர்  டிலான் பெரேரா  தெரிவித்துள்ளார்.

Previous Post

யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது !

Next Post

பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்பதை நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது | மைத்திரி

Next Post
பிரதமரினால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது | மைத்திரி

பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்பதை நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது | மைத்திரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026

Recent News

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures