நடிகர் விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள அதிரடி படம் ‘ஆக்ஷன்’. இந்தப் படம் வரும் 15ல் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள துணை முதல்வர் ஆர்.கே.எஸ் என்ற கதாபாத்திரத்தின் மனைவி கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிகை சாயா சிங் நடித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.