‘வில்லவன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும் ‘மாயன்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் வினோத் மோகன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தி ரா – The Raw’ என பெயரிடப்பட்டு, டைட்டிலும், டைட்டிலுக்கான மோசன் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் மான்சூ மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ தி ரா- The Raw’ திரைப்படத்தில் வினோத் மோகன், அஞ்சலி அனீஷ், வினோத் கிஷன், ரங்கராஜ் பாண்டே, ரோன்சன் வின்சென்ட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விபின் பாஸ்கர் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி வி கே எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் மற்றும் 2 எம் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ‘டத்தோ’ கணேஷ் மோகனசுந்தரம் மற்றும் கே. வி. சபரீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில், இதன் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் நடித்திருக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களின் பெயரும், அவர்களின் திரைத் தோற்றமும் இடம் பிடித்திருப்பதால் படத்தைப் பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.










