இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறவுள்ள இச்சுற்றுப்பயணம் 3 ஒருநாள் போட்டிகளையும் 3 இருபதுக்கு – 20 போட்டிகளையும் உள்ளடக்கியுள்ளது.
போட்டி அட்டவணைப்படி, இந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 13 ஆம் திகதி டெல்லியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், அந்தக் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய வளிமாசடைவு மற்றும் டெல்லி மைதானத்தில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்புப் பணிகள் என்பவற்றை முன்னிட்டு, போட்டி நடைபெறும் இடத்தை மாற்றுமாறு டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தொடரின் 2-வது ஒருநாள் போட்டி திட்டமிட்டபடி டிசம்பர் 16 அன்று பெங்களூருவிலும், 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 19 அன்று அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










