Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருகோணமலை தென்னைமரவாடி ஆலயத்தில் பொங்கலுக்கு சென்றவர்களுக்கு தடை உத்தரவு

February 23, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
திருகோணமலை தென்னைமரவாடி ஆலயத்தில் பொங்கலுக்கு சென்றவர்களுக்கு தடை உத்தரவு

திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்கிராமமான தென்னைமரவாடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் வழிபாடுகளுக்கு சென்ற மக்களுக்கு புல்மோட்டை பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டு பொங்கல் நிகழ்வை நடாத்த விடாது தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (23) தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் மற்றும் அன்னதான நிகழ்வினை புல்மோட்டை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று தென்னமரவாடி கிராம மக்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வழமை போன்று இன்றைய தினமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இப்பொங்கல் விழாவிற்கு கிராம மக்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தனர். 

இச்சந்தர்ப்பத்தில் இக்கிராம மக்களால் பொங்கலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலய வளாகத்திற்குள் திடீரென நுழைந்த நூறுக்கணக்கான  பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர், புலணாய்வாளர்கள் கலகம் அடக்கும்  ஆயுதங்களுடன் வருகை தந்து அப்பிரதேசத்திலிருந்த கிராம மக்களையும் வெளி பிரதேசத்திலிருந்து வருகை தந்த மக்களையும் காரணமின்றி தடுத்து வைத்தனர்.

புல்மோட்டை பொலிஸாரால் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தென்னமராவடி கந்தசாமி மலை முருகன் கோவில் அமைந்துள்ள பிரதேசம் சங்கமலை புராதன விகாரைக்குரிய இடமான தொல்லியல் பிரதேசம் என்பதால் அப்பகுதிக்குள் உள்நுழைந்து இந்துமத வழிபாடுகளில் ஈடுபடுவது மற்றும் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுவது ஆர்ப்பாட்டம்  ஏற்படக்கூடிய வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை தடுக்குமாறு கோரி புல்மோட்டை பொலிஸார் திருகோணமலை நீதவான் மன்றில் செய்த விண்ணப்பத்துக்கு ஏற்றவகையில் நீதிமன்றம் மேற்குறித்தவாறு தடை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரால் பெறப்பட்ட அந்த  தடையுத்தரவில் தென்னைமரவாடி பகுதியைச் சேர்ந்த நான்கு தமிழ் மக்களின் பெயர் குறிப்பிட்டும், அகம் அமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் ஆகிய அனைவரும் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 106 (01) (3) பிரிவின் கீழ் இந்த தடையுத்தரவு செல்லுபடியாகும் என பொலிஸார் தடையுத்தரவை வழங்கி பொங்கல் நிகழ்வுக்கு வந்த தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர். 

தென்னைமரவாடி பிரதேசம் முற்றுமுழுதாக தமிழ் மக்கள் நிறைந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணத்தின் எல்லையில் திருகோணமலை மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த தமிழ் கிராமமாகும் இந்த கிராமத்தில் உள்ள தமிழ் மக்கள் 1984 ஆம் ஆண்டு சிங்கள காடையர்கள் மற்றும் இராணுவத்தினரால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டு கிராமத்தை தீயிட்டு கொளுத்தி கிராமத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர் . 

மீண்டும் 2010 க்கு பின்னர் தமிழ் மக்கள் மீள்குடியேறிய பின்னர் அப்பகுதியில் உள்ள பெருமளவான தமிழ் மக்களின் இடங்கள் சிங்களமயமாக்கபட்டிருந்த நிலையில் கந்தசாமி மலை முருகன் கோவில் அமைந்துள்ள பகுதியும் தொல்லியல் பிரதேசம் என குறிப்பிட்டு புல்மோட்டை அரிசிமலை பகுதியில் உள்ள பனாமுரே திலகவன்ச  என்ற பிக்குவும் இராணுவத்தினரும் தமிழ் மக்களின் வழிபாடுகளுக்கு தடை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Previous Post

3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி!

Next Post

நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

Next Post
இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்

நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures