Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்- விமானிகள் பார்த்தது உண்மைதானா?

November 16, 2018
in News, Politics, World
0
திடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்- விமானிகள் பார்த்தது உண்மைதானா?

அதை அவர் “It was like Mach 2” என்று விவரித்தார். இது கேட்கும் ஒலியின் வேகத்தைவிட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
திடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்… விமானிகள் பார்த்தது உண்மைதானா?
கடந்த வெள்ளி நவம்பர் 9 அன்று அதிகாலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸைச் சேர்ந்த விமானி அயர்லாந்தைச் சேர்ந்த ஷானன் நகர வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டார். அவர் தாங்கள் பறந்துகொண்டிருக்கும் இடத்தில் ஏதேனும் ராணுவ நடவடிக்கைகள் இருக்கிறதா என்றும் அவர்கள் பறக்கும் பகுதியில் எதோ ஒன்று வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறதென்றும் தெரிவித்தார். இதற்கு அந்தக் கட்டுப்பாட்டு அறையும் அப்படி ஒன்றும் அங்கு நடக்கவில்லையே என்று பதிலளித்தது. கனடா நகரமான மாண்ட்ரீயலிலிருந்து லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்துக்குப் பறந்துகொண்டிருந்த அந்த விமானி ஒரு பிரகாசமான ஒளி வேகமாக வடக்கை நோக்கிச் சென்றுள்ளதைப் பார்த்துள்ளார். தன் விமானம் போகும் பாதைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லையென்றாலும் என்னது அது என்ற ஐயத்தில் இப்படி கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.

ஆச்சர்யம் என்னவென்றால் அதை இவர் மட்டும் பார்க்கவில்லை. அதே சுற்றுவட்டாரத்தில் மான்செஸ்டர் நகரை நோக்கிப் பறந்துகொண்டிருந்த விர்ஜின் விமானத்தின் விமானியும் எதோ ஒன்று வேகமாக நகர்வதைப் பார்த்துள்ளார். அவரும் இவர்களின் உரையாடலில் இணைந்தார். அது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த விண்கல்லாக இருக்கலாம் என்றும் ஒரே பாதையில் இதேபோன்று பல மிக வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார் அவர். அதை அவர் “It was like Mach 2” என்று விவரித்தார். இது கேட்கும் ஒலியின் வேகத்தைவிட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இருவேறு கூற்றுகளால் தற்போது இவை வேற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டமாக இருக்கலாம் என ஒருபுறம் செய்திகள் கிளம்பத்தொடங்கியுள்ளன. இதை முற்றிலும் மறுக்கமுடியாதெனக் காரணங்களையும் எடுத்துவைக்கின்றனர் சிலர். இதைப்போன்ற விசித்திரமான வான்வெளி நிகழ்வுகளைப் பற்றி தகவல்கள் சேகரிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் 22 மில்லியன் டாலர்களை அரசு ஒதுக்கியுள்ளதை உறுதிசெய்தது அமெரிக்க ராணுவத்தளமான பென்டகன். ஆனால், இந்த UFO (Unidentified Flying Object) மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய எந்த ஓர் ஆராய்ச்சியிலும் அரசுக்கு ஈடுபாடு இல்லை என்றும் கூறிவந்தது. மற்றும் ஏரியா 51 என்ற ரகசிய ராணுவத்தளத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பல வருடகாலமாக மறைத்து வைத்திருந்தது அமெரிக்க அரசு. இதில்தான் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நம்பப்பட்டது. இந்த வாதத்துக்கு ஏற்றதுபோல பல விளக்கப்படாத மர்மமான விஷயங்கள் இந்த இடத்தைச் சுற்றி நடந்துள்ளன. ஏரியா 51 என்று தேடினாலே அத்தனை மர்மமான கதைகள் கிடைக்கும்.

Previous Post

குறைந்த விலைக்கு மீன்களை கொள்வனவு செய்வதாக முத்தரிப்புத்துறை மீனவர்கள் கவலை

Next Post

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

Next Post
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சுரேஷ் சலே விசாரணை | சந்தேகம் எழுகிறது | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சுரேஷ் சலே செய்த மிகப்பெரும் தவறு : சுட்டிக்காட்டும் சாமர எம்.பி

June 15, 2026
ஆட்டி – திரைப்பட விமர்சனம்

ஆட்டி – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே. தீவுகள்; ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி, அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி

நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே. தீவுகள்; ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி, அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி

June 14, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையலாம்

June 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures