தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி தயாரிப்பாளரும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.பி. சௌத்ரி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு 70 வயதிற்கு மேல் ஆகும்.
தனிப்பட்ட பணிக்காக பயணம் செய்திருந்த அவர், விபத்துக்குள்ளானபோது கடுமையான அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனளிக்கவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்த அவர், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ஆரம்ப வெற்றிப் படங்களில் முக்கிய பங்காற்றியவர்.
அவரது உடல் சென்னை கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. திரையுலகினரும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
