Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சம அளவில் மோதப்படும் தேசிய சுப்பர் லீக் இறுதிப் போட்டி ; தம்புள்ளை 222 – 9 விக்., 107 – 6 விக்., கொழும்பு 146

May 6, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சம அளவில் மோதப்படும் தேசிய சுப்பர் லீக் இறுதிப் போட்டி ; தம்புள்ளை 222 – 9 விக்., 107 – 6 விக்., கொழும்பு 146

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) ஏற்பாடு செய்துள்ள தேசிய சுப்பர் லீக் 4 நாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் கொழும்பு அணியை விட தம்புள்ளை அணி 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் மீதம் இருக்க 183 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி அதன் முதல் இன்னிங்ஸை 9 விக்கெட்கள் இழப்புக்கு 222 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டதுடன் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கொழும்பு அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திவரும் இப் போட்டியில் தம்புள்ளை அணியைச் சேர்ந்த கவிந்து பத்திரண 5 விக்கெட் குவியலையும் கொழும்பு அணியைச் சேர்ந்த ப்ரபாத் ஜயசூரிய, சமோத் பட்டகே ஆகிய இருவரும் 4 விக்கெட் குவியல்களையும் பதிவு செய்துள்ளனர்.

துடுப்பாட்டத்தில் ஐவர் மாத்திரமே 35 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். அவர்களில் சொனால் தினூஷ மாத்திரம் அரைச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.

எண்ணிக்கை சுருக்கம்

தம்புள்ளை 1வது இன்: 222 – 9 விக். டிக்ளயார்ட் (சொனால் தினூஷ 51, அஞ்சல பண்டார 40, பவன் ரத்நாயக்க 39, ப்ரபாத் ஜயசூரிய 54 – 4 விக்., ஜனித் லியனகே 18 – 2 விக்., தனஞ்சய லக்ஷான் 42 – 2 விக்.)

கொழும்பு 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 146 (சண்முகநாதன் ஷாருஜன் 44, சரித் அசலன்க 27, கவிஜ கமகே 25, கவிந்து பத்திரண 51 – 5 விக்., அக்கில தனஞ்சய 17 – 3 விக்.)

தம்புள்ளை 2வது இன்: 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 107 – 6 விக். (நிஷான் மதுஷ்க 43, விஷாத் ரந்திக்க 21. சமோத் பட்டகே 21 – 4 விக்.)

Previous Post

புங்குடுதீவு வித்யா கொலை வழக்கு ; நான்கு பேருக்கும் மரண தண்டனை உறுதியானது

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures