Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

`தமிழிசையை இதற்காகத்தான் வசைப்பாடினேன்

June 5, 2018
in News, Politics, World
0

“பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை ஓவராகப் பேசுகிறார். இதனால்தான் அவரை விமர்சித்தேன்” என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூர்யா தேவியைச் சந்தித்த வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசையைத் தரக்குறைவாக விமர்சித்த திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த சூர்யா தேவியை போலீஸார் கைது செய்து சென்னைப் புழல் பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். அவரை வழக்கறிஞர் தமிழ்வேந்தன், நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்வேந்தனிடம், சூர்யா தேவி பல தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.

இதுகுறித்து தமிழ்வேந்தன் கூறுகையில், “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதற்கு முன்பு சூர்யா தேவி எனக்கு அறிமுகம் கிடையாது. தமிழிசை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சூர்யா தேவியைச் சந்திக்க என்னுடைய முகநூல் நண்பர்கள் வேண்டுகோள்விடுத்தனர். இதனால் நேற்று மாலை 3 மணியளவில் சென்னைப் புழல் பெண்கள் சிறைக்குச் சென்றேன். சிறைத்துறை அனுமதி பெற்று மாலை 3.10க்கு உள்ளே சென்று சூர்யா தேவியைச் சந்தித்தேன். 4 மணிக்குச் சிறையிலிருந்து வெளியில் வந்தேன். சுமார் 50 நிமிடங்கள் அவரிடம் பேசினேன்.

முதலில் என் பெயரை அவரிடம் தெரிவித்தவுடன் ஹெச்.ராஜா மீது வழக்கு போட்டீங்களே என்றார் சூர்யா தேவி. அதன்பிறகு சூர்யா தேவி என்னிடம், சமூக அவலங்களைத்தான் ஃபேஸ்புக்கில் வீடியோவாகப் பதிவு செய்தேன். எனக்கும் தமிழிசைக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை. சம்பவத்தன்று சென்னையில் உள்ள தோழி வீட்டுக்குக் குழந்தைகளுடன் வந்திருந்தேன். என்னை போலீஸார் தேடும் தகவல் தெரிந்ததும் விருகம்பாக்கத்தில் உள்ள லாட்ஜுக்குச் சென்று தங்கினேன். ஆனால், என்னை போலீஸார் கைதுசெய்துவிட்டனர். தற்போது என்னுடைய இரண்டு குழந்தைகளையும் அப்பா கவனித்துவருகிறார்.

இதற்கு முன்பு பல சமூக அவலங்களை குறிப்பிட்டு வீடியோ பதிவு செய்துள்ளேன். ஆனால், அதற்கெல்லாம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழிசை மேடம் ஓவராகப் பேசுகிறார். இதனால்தான் அவர் குறித்த தகவல்களை வீடியோவாகப் பதிவுசெய்தேன். பெண் பத்திரிகையாளர்களை அநாகரிகமாகப் பேசிய எஸ்.வி. சேகரை கைது செய்ய போலீஸார் தயங்குகின்றனர். ஆனால், தமிழிசையை விமர்சித்தற்காக என்னை போலீஸார் கைதுசெய்துவிட்டனர். என்னைச் சிறையில் அடைத்தாலும் எனக்கு எந்தவித கவலையும் இல்லை. வெளியில் வந்ததும் தொடர்ந்து என்னுடைய சமூக சேவையைச் செய்வேன் என்று சூர்யா தேவி என்னிடம் தெரிவித்தார்.

சூர்யா தேவி மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் இன்னமும் அவர் தைரியமாகத்தான் இருக்கிறார்” என்றார்.

Previous Post

மின்னல் தாக்கியதில் தஞ்சை பெரிய கோயிலின் கோபுர சிற்பம் சேதம்

Next Post

ஐரோப்பிய எல்லையை தாண்டியதால் பசு மாட்டிற்கு மரண தண்டனை!

Next Post
ஐரோப்பிய எல்லையை தாண்டியதால் பசு மாட்டிற்கு மரண தண்டனை!

ஐரோப்பிய எல்லையை தாண்டியதால் பசு மாட்டிற்கு மரண தண்டனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures