மாதம்பிட்டிய பகுதியில் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு வடக்கு பிராந்திய புலனாய்வு பிரிசு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போதே மேற்படி தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ 6 கிராம் ஐஸ் போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் ‘மோதர மயூரா’ எனும் போதைப்பொருள் கடத்தல்காரனின் ஆதரவாளர்கள் எனவும், நீண்டகாலமாக இக்கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் முன்னெடுத்திருந்த ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண், தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்புக்கான செலவுகளைப் பூர்த்தி செய்யவே இக்கடத்தலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆசிரியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் அவரது கணவரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












