Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமது வீதியை புனரமைத்து தருமாறு வடமாகாண ஆளுநருக்கு 96 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ள மக்கள்

January 17, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமது வீதியை புனரமைத்து தருமாறு வடமாகாண ஆளுநருக்கு 96 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ள மக்கள்

தமது வீதியை விரைந்து புனரமைத்து தருமாறு தமது ஒரு நாள் வேதனத்தை வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி மீசாலை மக்கள் வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – மீசாலை வடக்கு, இராமாவில் பகுதியில் உள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைத்து தருமாறு , கோரியே 96 பேர் தமது ஒரு நாள் ஊதியமான 1000 ரூபாய் வீதம் 96 ரூபாய் காசோலையை வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ், சார்ள்ஸ்க்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காசோலையுடன் கோரிக்கை கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவின் ஜே.320 மற்றும் ஜே.321 ஆகிய கிராம சேவகர் பிரிவுக்கு நடுவே அமைந்துள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை மேற்குறித்த இரு கிராம சேவகர் பிரிவில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இரு கிராம சேவகர் பிரிவு மக்கள் தவிர்த்த அயல் கிராமங்களில் உள்ள சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வீரசிங்கம் மத்திய கல்லூரி, வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றி செல்வதற்கும் இந்த வீதியினையே பயன்படுத்தி வருகின்றனர்.

பயணிக்கவே முடியாத நிலையில் பொரிய குழிகளுடன் இவ்வீதி காணப்படுகிறது. இவ்வாறான பாரிய குழிகளால் மழை காலங்களில் அதிக விபத்துக்களும் நடைபெறுகின்றன.

கடந்த 18 வருடங்களாக புணரமைப்பு செய்யப்படாமல் காணப்படும் இவ்வீதியினை புனரமைத்து தருமாறு சகல தரப்பினர்களிடம் பல கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம்.

இருப்பினும் இது வரை எந்தவிதமான சிறு புனரமைப்புக் கூட செய்யப்படாமல் பயன்படுத்தவே முடியாத வீதியாக எமது வீதி மாற்றமடைந்து வருகின்றது.

நாளுக்கு நாள் மிக மோசமான வீதியாக மாறி வரும் இவ்வீதியை உடனடியாக புணரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

இவ்வீதி புணரமைப்பிற்காக எமது பகுதியில் வசிக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்து அவர்களின் ஒரு நாள் வேதனமான (ஆயிரம் ரூபாவை) சேகரித்து வங்கியூடாக சுமார் 96 ஆயிரம் ரூபாவினை காசோலையாக அனுப்பி வைத்துள்ளோம்.

அப்பணத்தினையும் புணரமைப்பு பணிகளுக்கான செலவு நிதியில் சேர்த்துக் கொள்வதோடு, வீதியின் புனரமைப்பு பணிகளை துரித கதியில் முன்னெடுக்குமாறு மீண்டும் கோரிக்கை முன்வைக்கின்றோம் என்றுள்ளது.

அதேவேளை அக் கோரிக்கை கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன, யாழ்.மாவட்ட செயலர், சாவகச்சேரி பிரதேச செயலர், கொடிகாமம் பிரதேச சபை செயலாளர் உள்ளிட்டோருக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இரத்துச்செய்யும் | ஹர்ச

Next Post

லிந்துலை – பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆசிரியர் பலி

Next Post
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

லிந்துலை - பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆசிரியர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் ‘ஃபீல் மை லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் ‘ஃபீல் மை லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

July 15, 2026
MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ்

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ்

July 15, 2026
அரச ஊழியர்களுக்கு கற்பிக்கப்படவுள்ள இலவச பாடநெறி

தேர்தலில் போட்டியிடும் அரச அதிகாரிகளின் விடுமுறை குறித்து புதிய சுற்று நிரூபம்

July 15, 2026
“அரசியல் கூட்டு” என கூடுகின்ற கூட்டங்கள் எல்லாமே புரோக்கர் கூட்டங்கள் – இளங்குமரன்

“அரசியல் கூட்டு” என கூடுகின்ற கூட்டங்கள் எல்லாமே புரோக்கர் கூட்டங்கள் – இளங்குமரன்

July 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures