ஊழலுக்கு எதிரான ஐஏஎஸ் அதிகாரிகளில் சகாயம் குறிப்பிடத்தக்கவர். கிரானைட், மணல் கொள்ளை சம்பந்தமாக அவர் நடத்திய விசாரணை பல ஊழல்களை வெளிச்சம் போட்டது. அவரது நேர்மையான துணிச்சலான விசாரணையை பலரும் பாராட்டினர்.
இந்நிலையில், சில சமூக நோக்கமுள்ள படங்களின் ஆடியோ விழாக்களில் கலந்து கொண்டு வரும் ஐஏஎஸ் சகாயம், மே 8-ந்தேதியான இன்று மாலை 6 மணிக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கதையின் நாயகனாக நடித்துள்ள டிராபிக் ராமசாமி படத்தின் டீசரை வெளியிடுகிறார்