Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஞானசார தேரரின் உரிமைகள் மீறப்படுகின்றன : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

October 28, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு முறைப்பாடு செய்வதற்காக கையொப்பமிட்ட ஆவணத்தை அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளமை சட்டரீதியான உரிமைகளை மீறும் செயற்பாடாகும் எனத் தெரிவித்து சட்டத்தரணி தனுஷ்க சில்வா மற்றும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை  (28) முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

சட்டத்தரணி தனுஷ்க சில்வா தெரிவிக்கையில்,

கடந்த வியாழக்கிழமை தற்பேது நோர்வே நாட்டில் உள்ள பிக்சு கிளெப்பே ஆரியமக்க தேரரின் அறிவுறுத்தலின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று ஞானசார தேரரைச் சந்தித்து சட்ட ஆலோசனை வழங்கினேன். அத்துடன், அவர் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவிப்பதற்காக, அதற்கு எதிர்ப்பு இல்லை என்பதைத் தெரிவிக்கும் ஆவணத்தில் அவரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டேன்.

எனினும், அந்த ஆவணத்தின் உள்ளடக்கத்தைப் பரிசோதிக்க வேண்டுமென சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், அது நீதியமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது. இதுவரை அந்த ஆவணத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

சட்டத்தரணிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான உரையாடல் இரகசியமானது. அதன் உள்ளடக்கத்தைப் பரிசோதிப்பதற்கு எந்தவொரு நிறுவனத்துக்கும் உரிமை இல்லை. எனவே, எனது தொழில்சார் உரிமையும் ஞானசார தேரரின் உரிமைகளும் மீறப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். இதுதொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சட்ட நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கிறோம் என்றார்.

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா தெரிவிக்கையில்,

ஞானசார தேரரின் அரசியல் தொடர்பில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் தற்போது சிறைக்கைதியாக இருப்பதால், அவரது உரிமைகளைப் பாதுகாப்பதே எமது பொறுப்பு. சட்டத்தின் மூலம் நிவாரணம் பெறுவதற்கும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளிடம் முறைப்பாடு செய்வதற்கும் அவருக்கு உரிமை உள்ளது.

அவர் ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு முறைப்பாடு செய்வதற்கும் ஏன் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன? சட்ட ஆலோசனை என்ற காரணத்தை முன்வைத்து நடவடிக்கைகள் தடுக்கப்படுகின்றன.

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளின் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த விடயம் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கும் அறிவித்துள்ளோம். ஞானசார தேரரின் உரிமைகளைப் பாதுகாத்து, சர்வதேச முறைப்பாட்டுக்கான வாய்ப்பைத் தடுக்க வேண்டாம் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Previous Post

பிக்குகளின் சத்தியாக்கிரக போராட்டத்தின் பிண்ணனியில் ராஜபக்சக்கள்!

Next Post

வெலிங்டனில் ரி20 சாதனைகளைப் பொழிந்த அபிஷேக் ஷர்மா மற்றும் இந்தியா

Next Post
வெலிங்டனில் ரி20 சாதனைகளைப் பொழிந்த அபிஷேக் ஷர்மா மற்றும் இந்தியா

வெலிங்டனில் ரி20 சாதனைகளைப் பொழிந்த அபிஷேக் ஷர்மா மற்றும் இந்தியா

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

October 28, 2026
‘ஒபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பின் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

‘ஒபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பின் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

October 28, 2026
வெலிங்டனில் ரி20 சாதனைகளைப் பொழிந்த அபிஷேக் ஷர்மா மற்றும் இந்தியா

வெலிங்டனில் ரி20 சாதனைகளைப் பொழிந்த அபிஷேக் ஷர்மா மற்றும் இந்தியா

October 28, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

ஞானசார தேரரின் உரிமைகள் மீறப்படுகின்றன : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

October 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures