ஜி 7மாநாட்டின் போது சுற்றுச்சூழல் தொடர்பான அமர்வில் பங்கேற்பதைத் தவிர்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், அமெரிக்காவின் செல்வம் மின்சார ஆற்றலை அடிப்படையாகக் கொண்டது என்றும் அதனை கனவுகளுக்காகவும் காற்றாலைகளுக்காகவும் வீணடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிடம் அளவுகடந்த செல்வம் இருக்கிறது. அத்தனையும் என்காலடியில் கிடக்கிறது. உலகின் மின் உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் செல்வத்தை வீணே இழப்பதை நான் விரும்பவில்லை என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.