Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஹ்ரான், இளைஞர்களை தற்கொலை தாக்குதலுக்கு தயார்ப்படுத்தியது எப்படி?

May 7, 2019
in News, Politics, World
0

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹஸீம், இந்த தாக்குதலை நடத்துவதற்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியே இளைஞர்களை கண்டுப்பிடித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஆர்.அப்துல் ராசிக், இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அமைப்பு ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை மேற்கோள்காட்டிச் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“சஹ்ரான் ஹஸீம், தான் திட்டமிட்டிருந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கான 6 இளைஞர்களை, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியே, பகிரங்கமாகத் தேடிக் கண்டுபிடித்துள்ளார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த இளைஞர்களையும், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராகும் மனநிலைக்குக் கொண்டுவருவதற்கான மூளைச் சலவையை சஹ்ரான் தொடர்ந்து பல மாதங்களாக மேற்கொண்டுள்ளார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முஸ்லிம்கள் அல்லாதவர்களை இலக்கு வைத்தே, இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இருந்ததாகக் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதற்காக, தற்கொலைத் தாக்குதலை நடத்தக்கூடிய மனப்பக்குவத்துக்கு அவ்விளைஞர்களைக் கொண்டுவருவதற்காக, அவர்களுக்கான மூளைச்சலவை செய்யும் பணியில், சஹ்ரான் ஹாஸிம் தீவிரமாகச் செயற்பட்டுள்ளார்

இதற்காக, சமூக ஊடகங்களான பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளதாக தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஆர்.அப்துல் ராசிக் தெரித்துள்ளதாகக் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில், சஹ்ரான் ஹஸீமின் செயற்பாடுகளால் அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடுமென அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று, ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் இளைஞர்களின் மனதை மாற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்ட சஹ்ரான் ஹஸீமின் பேஸ்புக் மற்றும் யூடியூப் கணக்குகளை முடக்குமாறு, புலனாய்வுப் பிரிவினரிடம் தாம் கோரியிருந்தோம்.

அவ்வாறு அந்த சமூக வலைத்தளங்களை மேற்பார்வை செய்திருந்தால், சஹ்ரானின் திட்டங்களை இலகுவில் கண்டறிந்திருக்கலாம் என்று, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அமைப்பு உள்ளிட்ட ஏனைய அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளது.

Previous Post

வெசாக் பூரணை தின விழாக்களை தவிர்க்குமாறு வேண்டுகோள்

Next Post

மன்னாரில் செல் கவர்களை மீட்ட போலிஸ்

Next Post

மன்னாரில் செல் கவர்களை மீட்ட போலிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures