குறிப்பிட்ட இனத்துக்கென்று இல்லாமல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க எதிர்காலத்தில் இந்நாட்டின் தேசிய தலைவராக நின்று செயற்பட வேண்டும் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
மீத்தொட்டமுல்லை குப்பையை சுத்திகரித்து அப்பிரதேச மக்களுக்கு தீர்வு வழங்குவதில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கையாண்ட முறைமை பாராட்டத் தக்கது. தற்பொழுது மீத்தொட்டுமுல்ல குப்பைமேடு ஒழுங்கான முறைமைக்கு மாறி வருகின்றது.
அமைச்சர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அப்பிரதேசத்தில் கூறியிருந்த கருத்துக்களும் அனைவரினதும் வரவேற்பைப் பெற்றிருந்தது. எனவே, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தேசிய தலைமைத்துவத்தை நோக்கி நகர்வதற்கு சகல இனத்தவர்களினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அமைச்சின் மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மரிக்கார் எம்.பி. இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க தீவிர இனவாத சிந்தனைப் போக்கு கொண்ட ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

