அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் சகலருக்கும் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வருகை தருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று குழு நிலை விவாதத்தின் போது திடீரென நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் இரு அமைச்சுக்கள் தொடர்பான நிதி ஒதுக்கீட்டுத் திட்டம் தோல்வியடையச் செய்யப்பட்டமை அரசாங்கத்துக்கு எதிரான பெரும் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

