Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோத காடழிப்பிற்கு வனவளத் திணைக்களம் மௌனம்: ரவிகரன் குற்றச்சாட்டு

November 3, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி மக்களின் பூர்வீக வாழ்விடக் காணிகளையும் விவசாய நிலங்களையும் துப்புரவாக்கத் தடை விதிக்கும் வனவளத் திணைக்களம், மறுபுறம் இடம்பெறும் சட்டவிரோத காடழிப்புகளைக் கட்டுப்படுத்தத் தவறுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போதே சுற்றாடல் அமைச்சர் வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தியிடம் அவர் இக் குற்றச்சாட்டையும் கேள்விகளையும் முன்வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முன்வைத்த குற்றச்சாட்டுகளாவன, 

மாமரமும், வேம்பும், வீட்டு அத்திவாரமும் தெளிவாகத் தெரியும் மக்களின் பூர்வீகக் காணிகளை ஆவணம் இல்லை எனக் கூறித் தடுக்கும் வனவளத் திணைக்களம், படையினர் மற்றும் அத்துமீறுபவர்களின் சட்டவிரோத நிருமாணங்கள் மற்றும் காடழிப்புகளுக்கு அமைதி காக்கிறது.

அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகள்: வனவளத் திணைக்களத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

கண்காணிப்பு பலவீனம்: மக்கள் தங்களுக்கு முறைப்பாடு செய்து, தாம் நேரடியாகச் சென்று பார்வையிட்டு வனவளத் திணைக்களத்திற்குத் தெரிவிக்கும் வரை நூற்றுக்கணக்கான ஏக்கர் காடழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

குறிப்பிட்ட சம்பவங்கள்: வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திரிவச்சகுளம் பகுதியிலும், வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அருகிலும் நடைபெற்ற காடழிப்புகள் தொடர்பாக மக்கள் நேரடியாக வனவளத் திணைக்கள அதிகாரிகளையே சாடுகின்றனர்.

எனவே, தமது எல்லைப்பரப்புகளில் சட்டவிரோத மரம் வெட்டுதல், நிருமாணங்கள் மற்றும் காடழிப்புகளைக் கண்காணிக்கத் தவறுவது மீள நிகழாத வகையில் திணைக்களப் பொறுப்புக்கூறலை வலுப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுக்குமா என ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய சுற்றாடல் அமைச்சர் வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி, 

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எனது கவனத்திற்குக் கொண்டுவந்துள்ள சட்டவிரோத காடழிப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்க்கப்படும். 

வனப் பாதுகாப்புப் பகுதியில் காணப்படுகின்ற காணிகளை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதற்கோ அல்லது வன அழிப்பிற்கோ நாம் ஒருபோதும் அனுமதி வழங்குவதில்லை.

இருப்பினும், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் வனப்பயிரிடப்படுகின்ற காணிகளிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டு, அவை மரக்கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படுகின்றன. 

எனினும், ரவிகரனால் குறிப்பிடப்பட்ட குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்த்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Previous Post

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Next Post

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்

Next Post
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்

பொருளாதார நடவடிக்கைகளுக்காக 'TIN' இலக்கம் கட்டாயம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

இந்தியா – பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டிக்கு 84 இலட்சம் டிக்கெட்கள் கோரிக்கை

இந்தியா – பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டிக்கு 84 இலட்சம் டிக்கெட்கள் கோரிக்கை

November 3, 2026
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்

November 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

சட்டவிரோத காடழிப்பிற்கு வனவளத் திணைக்களம் மௌனம்: ரவிகரன் குற்றச்சாட்டு

November 3, 2026
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

November 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures