ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தயாராகி உள்ளார்.
அதற்கமைய வெகு விரைவில் சஜித் பிரேமதாஸவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடையில் அவர் ஏறவுள்ளார்.
தற்போது சஜித் பிரேமதாஸவுக்கு நெருக்கமான சமூக வலைத்தள பக்கங்களில் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா விரைவில் நாடு திரும்பவுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி தேர்தலில் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பில் சந்திரிக்கா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.