Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோழி திருட்டுத் தகராறில் இடம்பெற்ற கொலை: இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம்!

October 31, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கோழி திருட்டுத் தகராறில் இடம்பெற்ற கொலை: இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம்!

கோழி திருடப்பட்டதாக எழுந்த தகராறில் நபரொருவரைக் குத்திக் கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு நபர்களுக்குத் தங்கல்ல நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதுடன், சந்தேகநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.

ராஜபுரகே சுகத் வீரரத்ன மற்றும் ராஜமுனிகே நிஹால் சமிந்த என்றழைக்கப்படும் ‘மகத்தயா’ ஆகிய இருவருக்கே இவ்வாறு விஜயமுனிகே குணவர்தன என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

நீதிபதிகளான ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் பி. அபேகூன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் நேற்று வெள்ளிக்கிழமை 30 ஆம் திகதி இந்தத் தீர்ப்பை வழங்கியது.

கிராமவாசி ஒருவரின் கோழியை குறித்த நபர் திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அன்றைய தினம் பகல் வேளையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை அவர் தனது வீட்டிற்கு அருகில் வைத்துத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தை நேரில் கண்ட உயிரிழந்தவரின் தந்தை சாட்சியமளிக்கையில், இரண்டாவது குற்றவாளி தனது மகனைப் பிடித்துக் கொள்ள, முதலாவது குற்றவாளி அவரைக் கத்தியால் குத்தியதாகத் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் 11 கத்திக்குத்துக் காயங்களுக்கு உள்ளான நபர், சம்பவ இடத்திற்கு அருகிலேயே உயிரிழந்தார்.

சாட்சியமளித்த பிரதான சாட்சியாளரின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், பிரதிவாதிகளின் தற்காப்பு வாதங்களை நீதிமன்றம் சரியாக மதிப்பீடு செய்யத் தவறிவிட்டதாகவும் தெரிவித்து தண்டனைக்கு எதிராக இரு குற்றவாளிகளும் மேல்முறையீடு செய்திருந்தனர்.

எவ்வாறாயினும், தந்தையின் சாட்சியம் நம்பகத்தன்மை வாய்ந்தது என்றும், அது ஏனைய சாட்சியங்கள் மற்றும் மருத்துவச் சான்றுகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தீர்ப்பை வாசித்த நீதியரசர் மேனகா விஜேசுந்தர, குறுக்கு விசாரணையின் போது பிரதான சாட்சி உறுதியாகப் பதிலளித்துள்ளதுடன், சம்பவத்தை மிகைப்படுத்தித் தெரிவிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், காயங்கள் தொடர்பான மருத்துவச் சான்றுகள் முறைப்பாட்டுத் தரப்பின் வாதத்தை உறுதிப்படுத்துவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

முறைப்பாட்டுத் தரப்பின் குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்த பிரதிவாதித் தரப்பு தவறிவிட்டதாக முடிவு செய்த நீதிமன்றம், மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்ததுடன், தங்கல்ல நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை உறுதிசெய்தது.

இத்தீர்ப்புடன் நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் பி. அபேகூன் ஆகியோரும் உடன்பட்டனர்.

Previous Post

ராஜபக்ச குடும்பத்தை துரத்தும் நீதித்துறை – யோஷிதவுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

Next Post

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைப்பது மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்காது – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Next Post
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைப்பது மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்காது - முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைப்பது மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்காது – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

October 31, 2026
கோழி திருட்டுத் தகராறில் இடம்பெற்ற கொலை: இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம்!

கோழி திருட்டுத் தகராறில் இடம்பெற்ற கொலை: இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம்!

October 31, 2026
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

ராஜபக்ச குடும்பத்தை துரத்தும் நீதித்துறை – யோஷிதவுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

October 31, 2026
துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஏ ஒ டி’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஏ ஓ டி’ திரைப்படத்தின் அப்டேட்

October 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures