ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூட்டணிக்கான யாப்பொன்றைத் தயாரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சகல கட்சிகளினதும் அபிப்பிராயங்களை உள்ளடக்கியதாக இந்த கூட்டணி அரசியல் யாப்பு காணப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

