5 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமா எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு சாட்டிலைட் ரைட்ஸ் மூலம் பெரும் தொகை கிடைத்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக சாட்டிலைட் ரைட்ஸ் விலை போவதில்லை.
இந்நிலையில் தமிழ்ப்படங்களின் ஹிந்தி ரைட்ஸ் வாங்க போட்டி ஏற்பட்டுள்ளது. அதாவது தமிழ்ப்படங்களை ஹிந்தியில் டப் செய்து, வட இந்திய சேனல்களில் ஒளிபரப்பி வருகின்றனர்.
ஹிந்தியில் டப் செய்யப்படும் படங்களை ஒளிபரப்பும் போது டிஆர்.பி ரேட்டிங் எகிறுவதாகவும் சொல்லப்படுகிறது. எனவேதான் தமிழ்ப்படங்களின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் ஜீவா நடித்த கீ, கொரில்லா படங்களின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் விற்கப்பட்டிருக்கிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா?
கீ படத்தின் ரைட்ஸ் வெறும் 25 லட்சத்துக்கு விலைபோனது. ஆனால் ஜீவாவின் மற்றொரு படமான கொரில்லாவின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் 2.5 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.
ஏன் இந்த வித்தியாசம்? கொரில்லா படத்தின் ஹிந்தி ரைட்ஸ் 2.25 கோடி ரூபாய் கூடுதலாக விலைபோனதற்கு அந்தப் படத்தில் சிம்பன்சி நடித்திருப்பது தான் காரணம்.