வெயில்’ படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வசந்த பாலன். இந்த படத்தை தொடர்ந்து ரஜினியின் குபேரன், விஜய் நடித்த தலைவா உட்பட பல படங்களுக்கு இசை அமைத்து முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
சில படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய நிலையிலேயே ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இப்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது அரைடஜன் படங்களில் ஹீரோவாக நடித்து வரும், ஜி.வி.பிரகாஷ், அடுத்து வசந்தபாலன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘போக்கிரி ராஜா’ படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார்.
இந்த படத்தை முடித்துவிட்டு இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராமை, வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் வசந்த பாலன்.