மலையாளத்தில் உருவாகி வரும் படம் ஒரு ஆடார் லவ். இந்த படத்தின் டீசரில் இடம்பெற்ற தனது புருவ நடனத்தால் இந்திய அளவில் டிரென்டிங் நடி கையானார் பிரியா வாரியர். அதன்மூலம் அந்த படத்திற்கு பெரிய பப்ளிசிட்டி கிடைத்தது. அதனால் இப்போது அந்த படம் நான்கு இந்திய மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், அதே படத்தில் நடித்துள்ள இன்னொரு நடிகையான நூரின் செரிப்பும் பிரபலமாகி வருகிறார். அவரின் பல டப்மாஸ் வீடியோக்கள் ஏற்கனவே பிரபலமாகி வரும் வேளையில் தற்போது அவரின் வீடியோ ஒன்று அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. வெஸ்டர்ன் இசைக்கு அவர் பரத நாட்டியமாடியுள்ளார். 15 வினாடி உள்ள இந்த வீடியோவும் தற்போது இணையதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.
ஆக பிரியா வாரியருக்கு போட்டியாக மாறியிருக்கிறார் இந்த நூரின் செரிப்.