Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளாப் | திரைவிமர்சனம்

March 19, 2022
in News
0
கிளாப் | திரைவிமர்சனம்
கிளாப்
நடிகர் ஆதி
நடிகை கிரிஷா க்ரூப்
இயக்குனர் பிரித்வி ஆதித்யா
இசை இளையராஜா
ஓளிப்பதிவு பிரவீன் குமார்
தடகள வீரரான கதாநாயகன் (ஆதி) பல கனவுகளோடு பயணிக்கும் இளைஞன். எதிர்ப்பாராத விதமாக ஏற்படும் ஒரு விபத்தில் தனது காலையும், தனது தந்தை பிரகாஷ் ராஜையும் இழந்துவிடுகிறார். இதனால் தன்னுடைய கனவான தேசிய தடகள போட்டியில் பங்கேற்க முடியாமல் போய்விடுகிறது. தன்னுடைய கனவுகளை இழந்ததால் மன உளைச்சலில் வாழ்க்கையை வெறுக்கும் ஆதி, தான் காதலித்த கதாநாயகியை (ஆகான்ஷா சிங்) பிரிந்துவிட நினைக்கிறார். ஆனால், ஆதியின் மீது ஏற்பட்ட காதலால் அவரை பிரியமுடியாமல் உடனடியாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். தான் அடைய முடியாத ஆசையை நிறைவேற்ற, தடகள வீரர்களை தேடுகிறார் ஆதி. இதனிடையே மதுரையில் உள்ள ஒரு பெண் (கிரிஷா குருப்) விளையாட்டு வீரரைப் பற்றி அறிந்து கொண்டு தன்னால் சாதிக்க முடியாததை, அந்த பெண் சாதித்து தேசிய சாம்பியனாக வேண்டும் என்று பயிற்சி அளிக்கிறார். இறுதியில் விளையாட்டு வீரர் ஆதியின் ஆசை நிறைவேறியதா? ஆதியின் ஆசையை தடுப்பவர்கள் யார்? தடுக்க காரணம் என்ன? என்பதே இப்படத்தின் மீதிக்கதை. காலை இழந்த ஆதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இயல்பான நடிப்பும், கதைக்கு தேவைப்படுகிற நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகியாக ஆகான்ஷா சிங் தன்னுடைய கதாப்பாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். தடகள பெண்ணாக வரும் கிரிஷா குருப் அற்புதமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். நாசர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளனர். வழக்கமாக வரும் தமிழ் சினிமாவின் கதையாக இருந்தாலும் திரைக்கதை சற்று சுவாரசியாமக்கியுள்ளார் இயக்குனர் பிரித்வி ஆதித்யா. பல படங்களில் இடம்பெற்ற கதையம்சம் கொண்டுள்ளதால் கதையை தீர்மானித்துவிடும்படி அமைந்திருக்கிறது. இன்னும் கதையில் கவனம் செலுத்தியிருக்களாம் என்று மக்களின் கருத்தாகவுள்ளது.
விமர்சனம்
படத்தின் ஒளிப்பதிவு நல்ல காட்சியமைப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவின் குமார். விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் இவரின் பணி கூடுதலாக கவனிக்கும் படி அமைந்துள்ளது. இதுவரை பார்த்த இளையராஜாவின் இசையை போன்று இல்லை என்றாலும் இசை படத்திற்கு கூடுதல் பலமே. பின்னணி இசையின் மூலம் படத்தின் கதைகளத்தில் பயணிக்க வைத்திருக்கிறார் இளையாராஜா. மொத்தத்தில் ‘கிளாப்’ ரசிக்கலாம்.
#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]
Previous Post

போர் இழப்புகளில் இருந்து மீண்டு வர ரஷியா பல தலைமுறைகள் எடுக்கும்- உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

Next Post

ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஹர்பஜன்சிங் மேல்சபை எம்.பி.யாக வாய்ப்பு

Next Post
ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஹர்பஜன்சிங் மேல்சபை எம்.பி.யாக வாய்ப்பு

ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஹர்பஜன்சிங் மேல்சபை எம்.பி.யாக வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures