தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு நடிப்பில் இந்த சங்கராந்திக்கு வெளியான படம் சாரிலேரு நீகேவரு. அவருடன் விஜயசாந்தி, ராஷ்மிகா உள்பட பலர் நடித்து இருந்தனர். படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் வசூல் சிறப்பாக உள்ளது.
இதையடுத்து வம்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது. இந்த இடைவெளியில் ஓய்விற்காக அமெரிக்கா செல்கிறார் மகேஷ்பாபு. அவருடன் குடும்பத்தினரும் செல்ல உள்ளனர்.