இதுவரை, 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், இன்னும், பெரிய, ‘பிரேக்’ கிடைக்காததால், ஏமாற்றத்தில் உள்ளார், சாக் ஷி அகர்வால்.
காலா படத்தில் ரஜினியின் மருமகளாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாரா தோழியாகவும் நடித்துள்ளார். ஆனால், பெயர் சொல்லும் அளவுக்கு இன்னும் ஒரு படமும் அமையவில்லை என்ற வருத்தம், அவரிடம் உள்ளது. தற்போது, ஆயிரம் ஜென்மங்கள், புரவி, சின்ட்ரெல்லா உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏதாவது ஒரு படம், தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
இந்த புத்தாண்டு, சாக் ஷிக்கு மகிழ்ச்சிகரமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.