மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி ‛தலைவி என்ற படம் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்க, ஜெ .வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடிக்கின்றனர்.
ஜெயலலிதாவின் பர்ஸ்ட் லுக் வெளியானபோது கங்கனா அவரைப் போன்று இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இன்று எம்ஜிஆரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆராக நடிக்கும் அரவிந்த்சாமியின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் எம்ஜிஆரைப் போலவே தோற்றமளிக்கிறார் அரவிந்த்சாமி.