Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு ஐந்தாவது தடவையாக கூடியது!

September 15, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு ஐந்தாவது தடவையாக கூடியது!

எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழுவு மற்றும் அதிகாரிகள் குழு, ஐந்தாவது தடவையாகவும் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (14)  ஒன்றுகூடியது.

எல்-நினோ காலநிலைத் தாக்கமானது  வறட்சியான நிலையிலிருந்து எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மழையுடன் கூடிய காலநிலைக்கு  மாறவுள்ளதால், அதற்கு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மழையினால் ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற  அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், அத்தகைய அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்கள் எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பான அனர்த்த முன்னெச்சரிக்கை செயலமர்வுகளை நடத்துவதற்கும் குழு கவனம் செலுத்தியது.

மண்சரிவு அபாயத்தை எதிர்கொள்ளும் கண்டி, பதுளை, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு அதற்குரிய ஆரம்ப முன்னெச்சரிக்கை செயலமர்வுகளை நடத்துவதற்கும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும்  உரிய அதிகாரிகளுக்கு இதன் போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக மக்களை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் செயற்பாட்டு அறைகளை செயற்படுத்துவதன் மூலம் மக்களை முற்கூட்டியே தயார்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், எல் நினோ காலநிலைமையின் காரணமாக  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரணப் பணிகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, விசேட அமைச்சரவை உபகுழுவின் செயலாளர்/அழைப்பாளர், அதிகாரிகள் குழுவின் தலைவர்/ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ. விக்ரமசிங்க, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.கே. விஜேமான்னகே, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி காமினி ஜெயதிஸ்ஸ, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் டீ. பாரதிதாசன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

Previous Post

மயிலத்தமடு – மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி தொடர் போராட்டம்

Next Post

சுப்பர் லீக் முதல் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது; கடைசி போட்டியில் சீ ஹோக்ஸ் – புளூ ஈக்ள்ஸ்

Next Post
முதலாவது வெற்றிக்கான தாகத்துடன் ரட்னம் – நியூ யங்ஸ் அணிகள் மோதுகின்றன

சுப்பர் லீக் முதல் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது; கடைசி போட்டியில் சீ ஹோக்ஸ் - புளூ ஈக்ள்ஸ்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

முதலாவது வெற்றிக்கான தாகத்துடன் ரட்னம் – நியூ யங்ஸ் அணிகள் மோதுகின்றன

சுப்பர் லீக் முதல் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது; கடைசி போட்டியில் சீ ஹோக்ஸ் – புளூ ஈக்ள்ஸ்

September 15, 2026
எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு ஐந்தாவது தடவையாக கூடியது!

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு ஐந்தாவது தடவையாக கூடியது!

September 15, 2026
மயிலத்தமடு – மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி தொடர் போராட்டம்

மயிலத்தமடு – மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி தொடர் போராட்டம்

September 15, 2026
விமானத்தில் சேதமான 5 ஈட்டிகள் | கவலையுடன் நாடு திரும்பிய சம்பியன் ருமேஷ் தரங்க | அரசு நடவடிக்கை

விமானத்தில் சேதமான 5 ஈட்டிகள் | கவலையுடன் நாடு திரும்பிய சம்பியன் ருமேஷ் தரங்க | அரசு நடவடிக்கை

September 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures