Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகை உருக வைத்த அழுகை!

August 16, 2016
in News, Sports
0
உலகை உருக வைத்த அழுகை!

உலகை உருக வைத்த அழுகை!

ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க – அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்து அசத்தியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல் வீராங்கனை சிமியோன் மனுவேல், தங்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார்.

இலக்கினை 52.70 விநாடிகளில் கடந்த பிறகு தங்கத்தை வென்ற பின் சக நாட்டு வீராங்கனையை கட்டிப்பிடித்து சிமியோன் அழுத புகைப்படம், உலகையே உருக வைத்துள்ளது.

கடந்த 1960 ஆம் ஆண்டு காலகட்டத்தில், அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பொது நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதுடன், பொதுக்குளங்கள், ஏரிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஏதேனும் நீச்சல் குளத்தில் கறுப்பின மக்கள் குளித்துக் கொண்டிருந்தால், அங்கு வரும் மற்றவர்கள் முதலில் அவர்களை அங்கிருந்து வெளியேறச் சொல்வார்கள். கறுப்பின பிரபலங்களும் கூட அத்தகைய நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

கடந்த 1953 ம் ஆண்டு லாஸ் வேகாஸ் ஹொட்டல் ஒன்றில், திரைப்பட நடிகர் டரோத்தி டேன்ட்ரிட்ஜினின் கால் தண்ணீரில் பட்டதால், அந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

1964 ம் ஆண்டு பிரபல பாடகரும் நடனக் கலைஞருமான சம்மி டேவிஸ் ஜுனியர், புளோரிடாவில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்ததால், அவர் குளித்து முடித்ததும் தண்ணீர் வெளியே திறந்து விடப்பட்டது.

அமெரிக்காவில் சம உரிமை கோரி கறுப்பின மக்கள் போரடிய காலகட்டத்தில், செயின்ட் அகஸ்ட்டின் நகரில், கறுப்பினத்தவர் குளித்த நீச்சல் குளங்களில் ஆசிட் கலக்கப்பட்ட சம்பவம் கூட நடந்துள்ளது.

சிமியோனின் முன்னோர்கள் அவ்வளவு நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். அத்தகைய சமூகத்தில் பிறந்து இன்று நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் சிமியோன். அதனால்தான் தாங்க முடியாமல் மனசு வெடித்து அழுதே விட்டார்.

வெற்றி குறித்து தெரிவித்த அவர், ‘இந்த பதக்கம் எனக்கானது அல்ல. ஆப்பிரிக்க – அமெரிக்க இன மக்களுக்கு சொந்தமானது. எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய எனது முன்னோர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். எனது இளையத் தலைமுறையினர் என்னை முன்னுதாரணமாக கொண்டு சாதிக்க வேண்டும் என்றார்.

Previous Post

வியக்க வைக்கும் விடாமுயற்சி! கீழே விழுந்த பிறகும் தங்கம் வென்று வரலாறு படைத்த பிரித்தானிய வீரர்

Next Post

ஒலிம்பிக்கில் ஒற்றை ஷூவோடு ஓடி சாதித்த வீராங்கனை!

Next Post

ஒலிம்பிக்கில் ஒற்றை ஷூவோடு ஓடி சாதித்த வீராங்கனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கனடாவில் இலங்கை வைத்தியர் பாரிய குற்றச்சாட்டுகளில் கைது!

July 23, 2026
லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

July 23, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures