Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உண்மையை மறைக்க முயற்சிக்க வேண்டாம் | சபாநாயகரிடம் தெரிவித்தார் கிரியெல்ல

September 22, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
உண்மையை மறைக்க முயற்சிக்க வேண்டாம் | சபாநாயகரிடம் தெரிவித்தார் கிரியெல்ல

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு நிதியதிகாரம் இல்லை. பாராளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் உண்டு. நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் கேட்டு சபைக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிடுவது பாராளுமன்றத்தை மலினப்படுத்துவதாகும். உண்மையை மறைக்க முயற்சிக்க வேண்டாம் என எதிர்த்தரப்பின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரை நோக்கி குறிப்பிட்டார்.

எதனையும் மறைக்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. இணக்கப்பாட்டின் அம்சங்களை சபைக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவேன். நிதியமைச்சர் என்ற ரீதியில் அறிக்கையை சமர்பிப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

பாராளுமன்ற அமர்வு நேற்று புதன்கிழமை கூடிய போது சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகஸ்தர் மட்ட இணக்கப்பாட்டு அம்சங்களை பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.

விசேட கூற்றை முன்வைத்த எதிர்தரப்பின் பிரமத கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல,

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகஸ்தர் மட்ட அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு,அரசியல் கட்சி தலைவர் கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ள போதும் இதுவரை அந்த அறிக்கை பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

அறிக்கை கைச்சாத்திடப்படவில்லை ஆரம்பக்கட்ட இணக்கப்பாடு மாத்திரம் எட்டப்பட்டுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுகிறது,அறிக்கையில் உணர்வு பூர்வமாக விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆகவே அவற்றை பகிரங்கப்படுத்த முடியாது என குறிப்பிட்டுக்கொண்டு அரச அதிகாரிகள் உண்மையை மறைக்கிறார்கள். நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் கடந்த காலங்களில் பாராளுமன்றத்துக்கு உண்மை காரணிகள் அறிவிக்கப்படவில்லை. இதன் விளைவு இன்று பாரதூரமாகவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு அம்சங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு நீங்கள் (சபாநாயகர்) ஜனாதிபதியிடம் குறிப்பிட்டீர்களா. பதிலளித்த இல்லை நான் ஜனாதிபதியை சந்திக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் சர்வக்கட்சி மாநாடு இடம்பெற்ற போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்போது சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தினார்.

அதற்கு அப்போதைய நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்த போது தனக்கு சமர்ப்பிக்க வேண்டாம்,பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்டார்.ஆனால் தற்போது அவர் அதனை மறந்து விட்டு செயற்படுகிறார்.

அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உண்டு,ஜனாதிபதிக்கு நிதி அதிகாரம் இல்லை.ஜனாதிபதியிடம் கேட்டு நாணய நிதியத்தின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிடுவது பாராளுமன்றத்தை மலினப்படுத்துவதாகும்.ஜனாதிபதிக்கு நிதி வழங்குவதாயின் அதற்கு பாராளுமன்றமே அனுமதி வழங்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை பகிரங்கப்படுத்தாமல் இரகசியமாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகயை எதிர்கொண்டுள்ளார்கள்,ஆகவே உண்மையை மறைக்க வேண்டாம் என சபாநாயகரிடம் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துரைத்த சபாநாயகர் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீங்கள் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.நிதியமைச்சர் என்ற ரீதியில் அறிக்கையை ஜனாதிபதியே சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

Previous Post

இன்றைய மின்வெட்டு குறித்த விபரம்

Next Post

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் அடுத்த வருடம் லண்டனில்

Next Post
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் அடுத்த வருடம் லண்டனில்

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் அடுத்த வருடம் லண்டனில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே. தீவுகள்; ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி, அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி

நடப்பு சம்பியன் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே. தீவுகள்; ஸ்கொட்லாந்துக்கு வரலாற்று வெற்றி, அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி

June 14, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையலாம்

June 14, 2026
இராணுவமே வெளியேறு ; வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் பூர்த்தி ; யாழில்.இருவேறு இடங்களில் நாளை போராட்டம்

June 14, 2026
கனடா – பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

கனடா – பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

June 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures