இந்தியாவில் மிக நீண்ட காலமாக அகதிகளாக அல்லல் படுகின்ற ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் விடிவு ஏற்படும் விதமாக அவர்களுக்கு இந்தியக் குடியுரிமையை பெறுகின்ற செயலில் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் துணிந்து இறங்க வேண்டும்.
பல்வேறு ஆட்சிகள் மாறியபோதும் இந்தியாவில் அகதிகளாக உள்ள ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் ஒரு மாற்றமும் இல்லை. ஈழத்திற்காக பல தியாகங்களை செய்து குரல் கொடுக்கும் தமிழ்நாட்டில் எம் மக்கள் இப்பிடி அவலத்தில் வாழ்வது கொடுமை.
இதனை கடந்த காலத்தில் எதிர்கட்சிகள் பேசியிருந்தன. ஆனால் ஆளும்கட்சி ஆகியபோது கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் முதலமைச்சர் தளபதி ஜோசப் விஜய் அவர்கள் இதில் துணிந்து செயலாற்ற வேண்டும்.
இதனை இந்தியாவின் ஆளும் கட்சியில் முக்கியஸ்தராக இருக்கும் நடிகை கஸ்தூரி போன்றவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதை அண்மையில் அவரிடத்திலேயே வலியுறுத்தியிருந்தேன்.
அப்படி முதலமைச்சர் விஜய் செயற்பட்டால் உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களின் ஆதரவை அவர் பெறுவார். அத்துடன் அது மிகப் பெரிய மதிப்பையும் உண்டு பண்ணும். ஈழத் தமிழ் மக்களின் மனங்களில் விஜயிற்கு இருக்கும் இடம் இன்னும் பெரிதாகும்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை













