நாட்டின் கரையோரப் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று மாலை மழை பெய்யக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மத்திய மலைநாட்டுப் பகுதியில் சில பிரதேசத்துக்கு மழை பெய்துள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று மாலை நேரத்திலும் இப்பிரதேசங்களில் சிறியளவு மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

