போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதுஷ் எதிர்வரும் 19 ஆம் திகதி அல்லது 20 ஆம் திகதியன்று இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்தும் டுபாயில் தங்கியிருக்க அவர் அந்நாட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் 18 ஆம் கிகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன்ன உள்ளிட்ட குழுவொன்று போதைப் பொருள் கைதிகளை இலங்கைக்கு அழைத்துவருவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த டுபாய் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

