Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்துக்களின் பெருஞ்சமர் | மீண்டும் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிகளுக்கிடையிலான சமர்!

February 26, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இந்துக்களின் பெருஞ்சமர் | மீண்டும் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிகளுக்கிடையிலான சமர்!

இலங்கை பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள கொழும்பு இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாண இந்து கல்லூரி அணிகளுக்கு இடையிலான 15வது “ஜனசக்தி லைஃப் இந்துக்களின் பெருஞ்சமர்” (Battle of the Hindus) மாபெரும் கிரிக்கெட் போட்டி மீண்டும் களைகட்டவுள்ளது.

 இம்முறை போட்டியை நடத்தும் கொழும்பு இந்து கல்லூரி தனது 75வது ஆண்டு நிறைவை (பவள விழா) கொண்டாடும் வேளையில் இப்போட்டி நடைபெறுவது கூடுதல் சிறப்பம்சமாகும். 

இப்போட்டியானது எதிர்வரும் மார்ச் மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் கொழும்பு பி.சரா ஓவல் (P. Sara Oval) சர்வதேச மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இப்போட்டிக்கு ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (Janashakthi Insurance PLC) தலைமை அனுசரணை வழங்குகிறது. இது குறித்து கருத்துத் தெரிவித்த அந்நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே, இலங்கையர்களின் கனவுகளை நனவாக்குவதே தமது நோக்கம் என்றும், இளம் சந்ததியினரின் ஆளுமையை வளர்ப்பதில் விளையாட்டு முக்கிய பங்கு வகிப்பதனால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டியுடன் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் Avenierr Pharma, Star Gold, 747 Auto Parts, IDMNC International மற்றும் Mode Engineering ஆகிய நிறுவனங்களும் இப்போட்டிக்கு தமது ஆதரவை வழங்குகின்றன.

இப்போட்டி குறித்து கருத்துத் தெரிவித்த கொழும்பு இந்துக் கல்லூரியின் அதிபர் இளையதம்பி இளங்கேஸ்வரன், கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவில் இந்த பெருஞ்சமர் நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், இரு கல்லூரிகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும் மாணவர்களிடையே சிறந்த ஒழுக்கத்தையும் விளையாட்டுத் திறனையும் வளர்க்கவும் இது ஒரு சிறந்த தளமாக அமையும் என்றும் தெரிவித்தார். 

அதேவேளை, யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் அதிபர் ரத்னம் செந்தில்மாறன் தனது வாழ்த்துச் செய்தியில், வடக்கு மற்றும் மேல் மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான இந்தப் போட்டி, பிராந்தியங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் அடையாளமாகும் எனக் குறிப்பிட்டதுடன், இதற்கு ஆதரவளிக்கும் ஜனசக்தி நிறுவனத்திற்குத் தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இம்முறை போட்டியில் இராமநாதன் தேஷ்கர் தலைமையில் களமிறங்கும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிக்கு முத்துக்குமார் அபிஷேக் உப தலைவராகவும், சுரேஷ் குமார் மிதுஷேகன் விக்கெட் காப்பாளராகவும் செயற்படுகின்றனர். இவர்களுடன் திவாகரன் யாதவ், விஸ்வநாதன் யுவராஜ், செந்தில்குமார் ஹர்ஷ மிதுமின, தவக்குமார் சந்தோஷ், ரஞ்சித் குமார் அகிலேஷ், சுரேஷ் சர்விஷ், கோடீஸ்வரன் யசூர்ஜன், கோபாலகிருஷ்ணன் தூயவன், சத்திய சீலன் சபேஷன், சௌந்தரராஜன் ஆகாஷ், ரவிராஜா தக்ஷேஸ், சசிகுமார் சதுர்ஷன் மற்றும் வெள்ளத்துரை அபினேஷ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவ்வணிக்கு எஸ். கோபிநாத் பயிற்சியாளராகவும், கே. ரஜீவ்காந்த் பொறுப்பாசிரியராகவும் (Master in Charge) செயற்படுகின்றனர்.

மறுபுறம், எஸ். சுபர்ணன் தலைமையில் களமிறங்கும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணிக்கு எஸ். ஹரிகரன் உப தலைவராகவும், ஆர். ஆதித்யன் விக்கெட் காப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர். அணியின் ஏனைய வீரர்களாக எஸ். செல்வேஜன், கே. நித்தீஸ், டி. பிரேமிகன், ஜே. பவனன், என். நேருஜன், எஸ். அபிவர்ணன், எம். டானிலாஷ், கே. துவாரகன், எஸ். அஸ்வின், பி. அனிஷ், எஸ். சிவகஜீசன், டி. பிரீத்திகன் மற்றும் ஜி. லக்ஸிகன் ஆகியோர் களம் காண்கின்றனர். இவ்வணிக்கு எஸ். அலன்ராஜ் பயிற்சியாளராகவும், டி. தயாபாலன் பொறுப்பாசிரியராகவும் வழிகாட்டுகின்றனர். 

பழமை வாய்ந்த இந்த இரு கல்வி நிறுவனங்களின் கௌரவத்திற்காக நடைபெறும் இப்போட்டியைக் கண்டுகளிக்க பழைய மாணவர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Previous Post

சுவிற்சர்லாந்து – இலங்கை 70 ஆண்டு இராஜதந்திர உறவு: “70 Years | 70 Faces” சிறப்பு கண்காட்சி கொழும்பில்

Next Post

நடிகர் மதும்கேஷ் நடிக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post
நடிகர் மதும்கேஷ் நடிக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் மதும்கேஷ் நடிக்கும் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகிந்தவை தூக்கிலிட வேண்டும்! குற்றம் சுமத்திய விமல்

விடுதலைப்புலிகள் அமைப்பின் பணத்தை இலக்குவைத்த ராஜபக்சர்கள்! பொன்சேகா வெளிப்படை

June 12, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லஷ்மி காந்தன் கொலை வழக்கு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ படத்தின் அப்டேட்

June 12, 2026
நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

June 11, 2026
மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

June 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures