ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணிக்கு எதிரான நான்கு நாள் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 5 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மீதம் இருக்க, 148 ஓட்டங்களால் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி முன்னிலையில் இருக்கிறது.
முதலாவது இன்னிங்ஸில் அபார சதம் குவித்த அஞ்சல பண்டார இரண்டாவது இன்னிங்ஸிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றார். புலிந்த பெரேராவும் அரை சதம் பெற்றார்.
முன்னதாக போட்டியின் 3ஆம் நாள் காலை தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணித் தலைவர் ரிவால்டோ க்ளார்க் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்தார்.
எண்ணிக்கை சுருக்கம்
வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 356 (அஞ்சல பண்டார 163, நிசல அபேரட்ன 48, அசித்த வன்னிநாயக்க 41, சண்முகநாதன் ஷாருஜன் 25, ரெயான் பண்டூ 46 – 3 விக்., ஜொஹான் லெய்ன் 68 – 3 விக்., ஜேடியா ப்ளேட்ஸ் 83 – 2 விக்.)
இலங்கை செய்திகள்
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 381 (ரிவால்டோ க்ளார்க் 127, மாவேந்த்ரா தீன்தயாள் 60, ஷக்கேயர் பெரிஸ் 55, டெமெல் எவ்லின் 35, ஜோஹான் லெய்ன் 35, ஷக்தி உதார 102 – 6 விக்., சாமோத் பட்டகே 65 – 2 விக்., நிசல அபேரட்ன 76 – 2 விக்.)
வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 2ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 173 – 5 விக். (அஞ்சல பண்டார 57 ஆ.இ., புலிந்து பெரேரா 50 ஆ.இ., ஜொஹான் லெய்ன் 34 – 3 விக்.)













