இங்கிலாந்தின் புகழ்பெற்ற புனித பீட்டர்பரப் தேவாலயத்தில் புவியின் மாதிரி வடிவம் முப்பரிமாண முறையில் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கிரேக்கக் கடவுளான கயா-வின் பெயரில், அமைக்கப்பட்டுள்ள இந்த புவி மாதிரி வடிவம், விண்வெளி மையத்தில் இருந்து பூமியைப் பார்க்கும் போது எவ்வளவு அழகாகக் காட்சியளிக்கும் என்பதைச் சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏற்கெனவே அதே தேவாலயத்தில் கடந்த ஆண்டு நிலவின் மாதிரி உருவம் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதே கலைஞர் ஜெர்ரெமின் கைவண்ணத்தில் தற்போது பிரம்மாண்ட புவி மாதிரி அமையப்பெற்றுள்ளது.
இந்த மாதிரியின் விட்டம் 22 அடியாகும். புவியின் அசல் தோற்றத்தை விட 18 லட்சம் மடங்கு சிறியதாகும். இறைவன் படைத்த அழகிய உலகை மாசு படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தும் பொருட்டு இவ்வாறு தேவாலயத்தில் காட்சிப்படுத்தியுள்ளதாக ஜெர்ரெம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதைக் காண தலைஉயர்த்துவோருக்கு அந்த அழகிய தேவாலயத்தின் கூரையில் உள்ள கட்டிடக் கலையையும் ரசிக்கும் படி ஈர்க்கும் என குறிப்பிட்டுள்ளார். நாசாவின் புகைப்படங்களிலிருந்து எடுத்து அதை வடிவமைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.