Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச கபடத்திற்கு இடமளியாது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டிற்கு ஒத்துழைப்போம் – தவிசாளர் நிரோஷ்

August 28, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரச கபடத்திற்கு இடமளியாது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டிற்கு ஒத்துழைப்போம் – தவிசாளர் நிரோஷ்

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாது அற்ப சலுகைளுடன்  குறித்த பைல்களை மூடுவதற்கு அரசாங்கம் செயற்படும்  நிலையில், நாம் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களால் மேற்கொள்ளப்படும் நீதி கோரும் மாநாட்டுக்கு முழுமையாக ஆதரவளிக்க வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்ட தினம் ஆகும். உள்நாட்டில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதியர் வெள்ளை வான்களிலும் அரச படைகளினால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். மேலும், இறுதி யுத்தத்தில் படைகளிடம் சரணடைந்தனர்.

இவர்கள் பற்றி உள்நாட்டில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அநுர அரசாங்கம் தேர்தல் வாக்குறுதியில் பல கதைகளை தெரிவித்தாலும் எதையும் நீதியாகச் செய்யவில்லை.  இன்றைய சூழலில் அவர்கள் தாங்களா? பிள்ளைகளைக் கடத்தினோம் எனக் கேட்கும் முதிர்ச்சியற்று நழுவுகின்றனர். மாறாக இராணுவத்தினையும் ராஜபக்சாக்களையும் பாதுகாக்கும் உத்தியை கையாளுகின்றனர்.

அரசினால் மேற்கொள்ளப்பட்ட நடத்தை ஒன்றுக்கு அரசாங்கங்கள் மாறினாலும் பொறுப்புகூற வேண்டியது கட்டாயமானதாகும். இன்றுவரை நாட்டில் கடந்த கால நிதி ஊழல்களுக்கும் சிங்கள மக்களை பாதித்த பாடுகொலைகளுக்கும் விசாரணை செய்யும் அரசாங்கம் தமிழ் மக்கள் மீதான எந்தப் படுகொலைக்கும் கடத்தல்களுக்கும் விசாரணை செய்யவில்லை.

இப்படியான நிலையில் சர்வதேச விசாரணையினை முன்னிறுத்தி எமது தாய்மார் போராடுகின்றனர். அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களை நிவர்த்திக்க பல்வேறுபட்ட நீதிக்குப் புறம்பான உபாயங்களை கையாண்டு சலுகை வழியில் எம்மை ஏமாற்ற நினைக்கின்றது.  அரசாங்கம் தனக்கிருக்கின்ற அரச திணைக்களங்கள், ஆளணி, ஆற்றலை பயன்படுத்தி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை உண்மைக்குப் புறம்பான நிகழ்ச்சிநிரல்கள் வாயிலாக ஏமாற்றி அழைத்து காணாமலாக்கப்பட்டவர்களின் பைல்களை மூடுவதற்கு முயற்சிக்கின்றது. இந்நிலையில் தாய்மார்களின் நீதிக்கான போராட்டத்திற்கு நாம் சகலரும் ஒத்துழைக்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்    தெரிவித்தார். 

Previous Post

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டு பிரஜைகள் ; அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை வழங்கும் பொறுப்பு எமக்குண்டு – ஜனாதிபதி

Next Post

ஏழாவது வெற்றிக்கு குறிவைத்து புளூ ஈக்ள்சை சந்திக்கிறது அப்கன்ட்றி லயன்ஸ்

Next Post
ஏழாவது வெற்றிக்கு குறிவைத்து புளூ ஈக்ள்சை சந்திக்கிறது அப்கன்ட்றி லயன்ஸ்

ஏழாவது வெற்றிக்கு குறிவைத்து புளூ ஈக்ள்சை சந்திக்கிறது அப்கன்ட்றி லயன்ஸ்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

August 29, 2026
தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

August 29, 2026
கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

August 29, 2026
தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ; காணாமல் போன உறவுகளின் சங்கம்!

தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ; காணாமல் போன உறவுகளின் சங்கம்!

August 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures