திரைப்பட நடிகைகள் அவர்களது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான புகைப்படங்களைப் பதிவிடுவது வழக்கம். ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா நேற்று அவருடைய சமூக வலைத்தளத்தில் கடற்கரையில் பிகினி உடையுடன் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார்.
ஒரு நாளைக்குள் அதை 22 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். அனுஷ்காவின் கணவரான விராட் கோலியும் அந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளார். ஒரு ஸ்மைலி, ஒரு ஹாட்டின் போட்டு லைக் செய்துள்ள விராட் கோலியின் லைக்கை 25 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளது கூடுதல் தகவல்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. கணவர் விராட் கோலியுடன் அனுஷ்காவும் அங்கு சென்றுள்ளார். ஓய்வு நேரத்தில் கடற்கரையில் அவர் எடுத்த புகைப்படத்தைத்தான் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். வழக்கம் போல இந்த புகைப்படத்திற்கும் எதிர்ப்பு கமெண்ட்டுகளும் வந்துள்ளன.