ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய்குமார் கதையின் நாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘மிஷன் மங்கள்’. இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் சில வருடம் முன்பு செவ்வாய் கிரகத்திற்கு விண்கலன் அனுப்பியதைப் பற்றிய படம் தான் இப்படம்.
இப்படம் அக்ஷய் குமார் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் அதிக ஓபனிங்கைப் பெற்ற படமாக அமைந்துள்ளது. படம் வெளியான ஆகஸ்ட் 15ம் தேதியன்று 29 கோடி வரை வசூலித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் 97 கோடி ரூபாயை வசூலித்து கடந்த வருடம் 2.0 படம் வசூலித்த 95 கோடி ரூபாய் சாதனையை முறியடித்துள்ளது.
இன்று ‘மிஷன் மங்கள்’ படம் 100 கோடி வசூலைக் கடந்துவிடும். அதன் மூலம் 11வது 100 கோடி ரூபாய் படத்தைக் கொடுக்கும் நடிகர் என்ற பெருமையைப் பெறுவார்.