ரொறொன்ரோ பொலிசார் தேடும் நேர்த்தியான ‘Lunchtime Bandit’ வங்கி கொள்ளைகாரன்!

ரொறொன்ரோ பொலிசார் தேடும் நேர்த்தியான ‘Lunchtime Bandit’ வங்கி கொள்ளைகாரன்!

ரொறொன்ரோ பொலிசார் ஒரே பகுதியில் இடம்பெற்ற ஐந்து வங்கி கொள்ளைகளில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.
இக்கொள்ளைகள் டேவிஸ்வில் சுற்றுவட்டாரத்தில் நடந்துள்ளது.நவம்பர் 21 முதல் டிசம்பர் 17-ற்கு இடைப்பட்ட காலத்தில மதியம் 1-மணியளவில் நடந்துள்ளது. லோறன்ஸ் அவெனியு மற்றும் டேவிஸ்வில் அவெனியுவிற்கு இடையில் யங் வீதியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
“lunchtime bandit,” என்ற பட்டப்பெயர் கொண்ட இந்த சந்தேக நபர் வாடிக்கையாளராக வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கி வைத்திருக்கின்றேன் காசு வேண்டும் என மிரட்டுகின்றார்.
இந்த குறிப்புக்கள் நன்றாக இலக்கண பிளையற்ற நோட்டுக்களாக காணப்பட்டதாக புலன்விசாரனையாளர் தெரிவித்தார்.
நேர்தியான 20களின் மத்திய வயது, மதிப்பான , நாகரீக ஆடை அணிந்த தோற்றம் கொண்டவர்.ஒரே ஆடைகளை தினமும் அணிந்திருப்பார்.அதே கோர்ட், தொப்பி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டுக்கள் ஒன்றின் போது சுரங்கப்பாதையில் செல்லும் போது சந்தேக நபர் பாதுகாப்பு வீடியோவில் பிடிபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல கொள்ளைகளை இந்த மதிப்பற்ற மனிதன் மேற்கொள்ள முன்னர் பிடிபடவேண்டும் என பொலிசார் கருதுகின்றனர்.
இடம்பெற்ற ஐந்து கொள்ளைகளில் நான்கு மதியம் 12-முதல்1-மணிக்கிடையில் நடந்துள்ளது.
ஒரு மாதத்தில ஐந்து கொள்ளைகள் மிக மோசமானதென தெரிவித்த பொலிசார் இந்நபரை வீதிகளை விட்டு அகற்ற வேண்டும் என கருதுகின்றனர்.
இந்நபர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிசாரருடன் 416-808-7350 அல்லது Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477).தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுகின்றனர்.

lunlun2

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News