முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்வதா? இல்லையா? என்பது தொடர்பிலான உத்தரவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி வெளியிடப்படும் என கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் ரங்க திஸாநாயக்க இன்று அறிவித்துள்ளார்.
அதுவரையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் சுகயீனமுற்று இருப்பதாக சிறைச்சாலையிலிருந்து எழுத்து மூலம் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்ததாகவும், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

