Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நரசிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம்: தேசிய ஊக்க மருந்து தடுப்பாணையம் அனுமதி

August 2, 2016
in News, Sports
0
நரசிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம்: தேசிய ஊக்க மருந்து தடுப்பாணையம் அனுமதி

நரசிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம்: தேசிய ஊக்க மருந்து தடுப்பாணையம் அனுமதி

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேசிய ஊக்க மருந்து தடுப்பாணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் கடந்த டெல்லி காமன்வெல்த் போட்டிகளில் தங்கமும், 2014 ஆசிய விளையாட்டில் வெண்கலமும் வென்றவர்.

2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கிலோ) வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 25-ல் இவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், தடை செய்யப்பட்ட ‘மெட்டாடியனன்’ என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது ‘ஏ, பி’ என இரு மாதிரிகளிலும் உறுதியானது.

இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நரசிங் யாதவ் கலந்து கொள்வது கேள்விக்குறியானது. இதனால் அவருக்குப் பதிலாக பிரவீண் ராணா மாற்று வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தேசிய ஊக்க மருந்து சோதனை அமைப்பின் ஆணையம் நரசிங் யாதவ் பிரச்னை குறித்து விசாரணை நடத்தியது.

அதில் தமக்கு தெரியாமல் உணவில் ஊக்கமருந்தை கலந்து விட்டுள்ளனர் என்று நரசிங் யாதவ் புகார் தெரிவித்தார். இது தமக்கு எதிராக நடந்த சதி என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், ஆணையம் முன் ஆஜராகி 600 பக்க விளக்கத்தையும் சமர்பித்தார். மொத்தம் மூன்றரை மணி நேரம், மூடப்பட்ட அறையில் விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

அதன்படி இன்று வழங்கிய தீர்ப்பில், நரசிங் யாதவ் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம். நரசிங் மீது எந்த தவறும் இல்லை. தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்கமருந்து கலந்துள்ளது. அவர் தெரியாமலேயே இதை பயன்படுத்தியுள்ளார் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் அவர் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இந்திய மல்யுத்த பெடரேஷன் அனுமதியைப் பெற்று இந்திய ஒலிம்பிக் சங்கம் இதற்கான முயற்சியை மேற்கொள்ளும்.

Previous Post

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி வீரர் அசத்தல் சாதனை!

Next Post

சதம் விளாசிய ரஹானே: இந்தியா 500 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்

Next Post
சதம் விளாசிய ரஹானே: இந்தியா 500 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்

சதம் விளாசிய ரஹானே: இந்தியா 500 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures