கர்நாடகாவில் ரஜினி உருவபொம்மைகள் எரிப்பு (படம் உள்ளே)

கடந்த ஜுலை 22ம் தேதி வெளியான கபாலி படம் கர்நாடகாவில் சுமார் 300 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தை கர்நாடகாவில் திரையிடப்பட்டதை எதிர்த்து ரஜினி ஒழிக என்ற கோஷத்துடன் சில அமைப்புகள் போராட்டம் நடத்தின.
போராட்டக்காரர்கள் பேசும்போது, ரஜினி கர்நாடகாவில் பிறந்தாலும் அவர் எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாகவும், கன்னடர்களுக்கு எதிராகவும் இருக்கிறார்.
300 திரையரங்கில் கபாலி படம் வெளியிடுவதால் கன்னட சினிமாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதற்காகவே போராட்டம் நடத்துகிறோம் என்கின்றனர்.












