அரசாங்கம் அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கும் நடவடிக்கையினால், திருப்தியடைய முடியாதுள்ளதாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது இது போன்று அமைச்சரவைப் பத்திரங்கள் முன்வைக்கப்பட்ட பல சம்பவங்கள் கண்துடைப்பாக இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானத்துடன் நாம் திருப்தியடையப் போவதில்லை. 30 தொழிற்சங்கங்களின் கூட்டணியாக இருந்து அரசாங்கத்தின் காத்திரமான தீர்வை எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு காத்திரமான தீர்வொன்றை அரசாங்கம் வழங்கத் தவறினால் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி முதல் ஐந்து நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.













