Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுபான்மையின மக்களின் அச்ச நிலைப்பாடு வெகுவிரைவில் மாற்றமடையும்: கோட்டா

September 28, 2019
in News, Politics, World
0

சிறுபான்மையின மக்கள் மத்தியில் காணப்படும் தனது செயற்பாடுகள் குறித்த அச்ச நிலைப்பாடு, வெகுவிரைவில் மாற்றமடையுமென ஸ்ரீலங்கா பொதுஜனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொரளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பு, ஸ்லேவ் ஹைலேன்ட் பகுதியில் அழகான தொடர்மாடிக் குடியிருப்பு தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன் நிர்மாணிப்புப் பணிகளின்போது, குறித்த பகுதியில் இருந்து தமிழர்களையும் முஸ்லிம்களையும் அப்புறப்படுத்தி, சிங்களவர்களை குடியேற்ற முற்படுவதாக எம்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

நாம் அதனை வேறு யாருக்கும் வழங்கவில்லை. வெளிநபர்களுக்காக அந்த வீடுகளை அமைக்கவில்லை.

ஆனால், எமது செயற்பாடுகள் தொடர்பாக பொய்யான பிரசாரமே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனை அந்த மக்களும் நம்பினார்கள்.

முஸ்லிம் மக்கள் மத்தியில், என்னை மிகவும் மோசமான ஒரு நபராகவே சித்தரித்துள்ளார்கள். உண்மையில், எனது குடும்பத்திலேயே மிகவும் அப்பாவி நான் தான். எனது அண்ணன் மஹிந்த ராஜபக்ஷவிடமே இதனை கேட்டுக்கொள்ள முடியும்.

இப்படியான நான் எவ்வாறு, மிகவும் மோசமான நபராக சமூகத்தில் சித்தரிக்கப்பட்டேன் என்ற கேள்வி என்னிடம் இன்றும் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.

அண்மையில், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரியொருவர் என்னை சந்திக்க வருகைத் தந்திருந்தார்.

அரை மணித்தியாலங்களே தேவை என கூறி கதைக்க வந்தவர், இரண்டரை நேரங்களைக் கடந்தும் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் செல்லும் போது, என்னிடம் ஒரு விடயத்தைக் கூறினார்.

அதாவது, எனது செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேசத்திற்கு மிகவும் பயங்கரமான தோற்றப்பாடே காண்பிக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், இங்கு வந்து பார்த்த பிறகு தான் உண்மைகள் தனக்குத் தெரிய வந்ததாகவும் அவர் என்னிடம் கூறினார்.

மேலும், இதனால்தான் அரை மணித்தியால சந்திப்பு, இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மேல் நீடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இவரின் இந்த நிலைப்பாட்டை, இம்முறை மக்களும் உணர்ந்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை என்னிடமுள்ளது.

சிங்களவர்கள் போன்றே தமிழர்களும், முஸ்லிம்களும் இன்று பாதுகாப்பு தொடர்பாக அச்சத்திலேயே உள்ளார்கள். நிச்சயமாக நாம் இந்தப் பிரச்சினைக்கு விடைக்கொடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தற்போதைய ஆட்சியாளர்களே மிகவும் மோசமானவர்கள்

Next Post

பணிப்புறக்கணிப்புக்களை ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு

Next Post

பணிப்புறக்கணிப்புக்களை ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

June 28, 2026
மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures