ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி செயலகத்தின் மேல் மாடியிலுள்ள ஜனாதிபதியின் அறைக்குச் சென்ற சில அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.
அமைச்சர்களில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கப் போகிறீர்களா? என்று கேட்டார்.
அந்தக் கேள்வியால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோபமடைந்தார். அவரது கோபம் அவர் அளித்த பதிலிலும் பிரதிபலித்தது.
உங்களுக்கு என்ன பைத்தியமா? நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன். நான் அத்தகைய முடிவை எடுக்கவில்லை எனவும் கோபத்துடன் பதிலளித்துள்ளார்.

